போகம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

போகம்1போகம்2

போகம்1

பெயர்ச்சொல்

 • 1

  (பயிர்) விளைச்சல்.

  ‘கால்வாய்ப் பாசன வசதி உள்ள இடங்களில் இரண்டு போகம் நெல்லும் மூன்றாம் போகம் உளுந்து, துவரை போன்ற பயறு வகைகளும் பயிரிடப்படுகின்றன’
  ‘மழையை நம்பியுள்ள பகுதிகளில் ஒரு போகம் மட்டுமே பயிர் செய்ய முடியும்’

போகம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

போகம்1போகம்2

போகம்2

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு (புலன்களால் அடையும்) இன்பம்.

  ‘வகைவகையான சாப்பாடு, வாசனைத் திரவியங்கள், பட்டாடைகள் என்று போகப்பிரியராக என் பெரியப்பா வாழ்ந்தார்’

 • 2

  அருகிவரும் வழக்கு புணர்ச்சி.

  ‘போகம் ஒன்றுதான் ஆண் பெண் உறவின் பொருளா?’