தமிழ் போட்டா போட்டி யின் அர்த்தம்

போட்டா போட்டி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு போட்டி என்பதன் (இரண்டாவது பொருளை மிகுவிப்பதற்காக) இரட்டித்து வரும் வடிவம்.

    ‘கதாநாயகி வேடத்துக்கு இரு நடிகைகள் இடையே போட்டா போட்டி!’
    ‘இரு வேறு குளிர்பான நிறுவனங்களின் போட்டா போட்டி காரணமாக லாபம் அடைவது விளம்பர நிறுவனங்கள்தான்’