தமிழ் போட்டி யின் அர்த்தம்

போட்டி

பெயர்ச்சொல்

 • 1

  பலர் அல்லது பல அணிகள் கலந்துகொண்டு வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசு கிடைக்கக்கூடிய முறையில் நடத்தப்படுவது.

  ‘நீளம் தாண்டுதல் போட்டியில் முதல் பரிசை எங்கள் கல்லூரி மாணவர் பெற்றார்’
  ‘ஆசிய விளையாட்டுப் போட்டி’
  ‘பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, வினாடிவினாப் போட்டி, மாறுவேடப் போட்டி ஆகியவற்றில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவுசெய்துகொள்ள வேண்டும்’
  ‘போட்டிக்கு வந்திருந்த கவிதைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் அடுத்த இதழில் அறிவிக்கப்படும்’

 • 2

  வெற்றி பெறுவதற்கு, ஒன்றை அடைவதற்கு அல்லது முன்னணியில் இருப்பதற்குத் தீவிர முனைப்புடன் ஒருவருக்கோ பலருக்கோ எதிராக ஒருவர் செயல்படுவது.

  ‘கடைத்தெருவில் இருக்கும் இடத்தை வாடகைக்குப் பிடிக்க பலத்த போட்டி நடக்கிறது’
  ‘தலைவர் பதவிக்குக் கடும் போட்டி’
  ‘உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் பல அணிகள் கலந்துகொண்டாலும் உண்மையான போட்டி பிரேசிலுக்கும் ஜெர்மனிக்கும் இடையில்தான்’
  ‘போட்டியைச் சமாளிப்பதற்காகச் சில தயாரிப்புகளுடன் இலவசப் பொருள்களைத் தருகிறார்கள்’
  ‘எந்த நடிகரையுமே எனக்குப் போட்டியாக நான் நினைத்ததில்லை’
  ‘அவர் கடை வைத்தால் போட்டிக்குச் சிலர் கடை வைப்பார்கள்’
  ‘போட்டி வேட்பாளர்’