தமிழ் போட்டுக்கொடு யின் அர்த்தம்

போட்டுக்கொடு

வினைச்சொல்-கொடுக்க, -கொடுத்து

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (உரிய கட்டணத்துக்கும் விலைக்கும் மேலாக) அதிகமாகத் தருதல்.

  ‘ரிக்ஷாக்காரர் ‘இரண்டு ரூபாய் கூடப் போட்டுக் கொடுங்கள்’ என்று கேட்டார்’

 • 2

  பேச்சு வழக்கு (ஒருவரைப் பற்றி) அளவுக்கு அதிகமாகக் குறைசொல்லி மாட்டிவிடுதல்.

  ‘நான் நேற்று படத்துக்குப் போனதைத் தம்பி அப்பாவிடம் போட்டுக்கொடுத்துவிட்டான்’
  ‘எப்போதும் மற்றவர்களைப் பற்றிப் போட்டுக்கொடுப்பதே அவன் வேலை’
  ‘அலுவலகத்தில் உள்ளவர்களைப் பற்றி மேலதிகாரியிடம் போட்டுக் கொடுத்துக் காரியம் சாதித்துக்கொள்கிறான்’