தமிழ் போதகர் யின் அர்த்தம்

போதகர்

பெயர்ச்சொல்

 • 1

  அருகிவரும் வழக்கு (கல்வி) கற்பிப்பவர்.

  ‘அவர் எனக்குப் போதகராக மட்டுமல்லாமல் நண்பராகவும் விளங்கினார்’
  ‘தத்துவ போதகர்’

 • 2

  கிறித்தவ வழக்கு
  கிறித்தவ நம்பிக்கையை எடுத்துரைப்பவர்.

  ‘போதகர் பிரசங்கம் செய்துகொண்டிருந்தார்’
  ‘வீடு இழந்தவர்களுக்குப் போதகர் உதவி செய்தார்’