தமிழ் போதும் யின் அர்த்தம்

போதும்

இடைச்சொல்

  • 1

    வாக்கியத்தின் முதல் பகுதியில் வரும் வினைச்சொல் குறிப்பிடும் செயல் உறுதியாகவோ அல்லது நிச்சயமாகவோ நடக்கும் பட்சத்தில் பின்வரும் விளைவு கட்டாயமாக இருக்கும் என்பதைக் குறிப்பிடப் பயன்படுத்தும் இடைச்சொல்.

    ‘அவனைப் பார்த்தால் போதும், குழந்தை அழ ஆரம்பித்துவிடும்’
    ‘நான் சொன்னால் போதும், பணம் கொடுத்துவிடுவான்’