தமிழ் போன்ற யின் அர்த்தம்

போன்ற

இடைச்சொல்

 • 1

  ‘(ஒன்றை அல்லது ஒருவரை) போலவே உள்ள’ என்ற பொருளில் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘அவரைப் போன்ற மனிதரைப் பார்ப்பது அரிது’
  ‘மல்லிகை போன்ற வாசம் உள்ள மலர்கள்’

 • 2

  ‘ஒத்த’ என்னும் பொருளில் உவம உருபாகப் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; ‘போல்’.

  ‘தாமரை போன்ற முகம்’