தமிழ் போய் யின் அர்த்தம்

போய்

இடைச்சொல்

 • 1

  குறிப்பிட்ட ஒரு செயலுக்கு ஒன்று பொருத்தமானது அல்லது ஒருவர் பொருத்தமானவர் இல்லை என்பதை உணர்த்தப் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘கட்டுவதற்குக் கயிற்றை எடுத்துவரச் சொன்னால் இந்த நைந்த கயிற்றைப்போய் எடுத்து வந்திருக்கிறாயே?’
  ‘இதைப்போய் நல்ல படம் என்றாயே?’
  ‘குழந்தையைப்போய் ஏன் திட்டுகிறாய்?’
  ‘அவனுக்குப்போய்ப் பரிசைக் கொடுத்திருக்கிறீர்களே!’