தமிழ் போர்வை யின் அர்த்தம்

போர்வை

பெயர்ச்சொல்

 • 1

  (குளிர் முதலியவற்றிலிருந்து பாதுகாப்பாக உடம்பை மூடும் வகையில் உள்ள) சற்றுக் கனமாக நெய்த துணி.

 • 2

  உண்மையான நோக்கத்தை மறைக்கப் பயன்படுத்தும் அடையாளம்.

  ‘அரசியல் போர்வையில் மறைந்திருக்கும் குற்றவாளிகளை இனம்கண்டு தண்டிக்க வேண்டும்’
  ‘மதம் என்கிற போர்வையில் நடக்கும் கலவரங்கள்’
  ‘அவருக்கு இலக்கியவாதி என்கிற போர்வை அவ்வப்போது தேவைப்படுகிறது’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு சால்வை.