தமிழ் போராட்டம் யின் அர்த்தம்

போராட்டம்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒரு நாடு, குழு போன்றவற்றின்) நலன், சுதந்திரம் முதலியவற்றைக் காத்துக்கொள்வதற்காக அல்லது பெறுவதற்காக அதிகாரத்தில் இருப்பவர்களை அல்லது தடையாக இருப்பவற்றைத் தீவிரமாக எதிர்த்தல்.

  ‘சுதந்திரப் போராட்டம்’
  ‘விடுதலைப் போராட்ட வீரர்’
  ‘அகிம்சைவழிப் போராட்டம்’
  ‘பேருந்து தொழிலாளர்கள் நடத்திய போராட்டம்’
  ‘வன்முறை சார்ந்த போராட்டத்தை நாங்கள் விரும்பவில்லை என்று எதிர்க் கட்சித் தலைவர் கூறினார்’
  ‘விலைவாசி உயர்வை எதிர்த்து எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள்’

 • 2

  ஒருவர் வாழ்வில் அனுபவிக்கும் சிரமங்கள்.

  ‘ஒவ்வொருவரின் வாழ்விலும் எத்தனையோ போராட்டங்கள்’

 • 3

  (இருவருக்கிடையே எழும்) தகராறு; மோதல்.

  ‘வீட்டுச் சொந்தக்காரருக்கும் குடித்தனக்காரருக்கும் இடையே தீராத போராட்டம்’