தமிழ் போராடு யின் அர்த்தம்

போராடு

வினைச்சொல்போராட, போராடி

 • 1

  (தனக்கு எதிராகவோ தடையாகவோ இருக்கும் ஒருவரை அல்லது ஒன்றை) எதிர்த்துச் செயல்படுதல்.

  ‘சுபாஷ் சந்திர போஸ் நம் நாட்டு விடுதலைக்காக ராணுவரீதியில் போராடினார்’
  ‘அடிமை முறையை ஒழிக்கப் போராடியவர் ஆபிரகாம் லிங்கன்’
  ‘இயற்கையுடன் போராடி மனிதன் கண்ட விஞ்ஞான முன்னேற்றங்கள்’
  ‘கோரிக்கைகள் நிறைவேறும் வரை விடாமல் போராடுவோம்’

 • 2

  (பாதிப்பு ஏற்படுத்தும் ஒன்றை அல்லது ஒருவரை) எதிர்த்துச் செயல்படுதல்.

  ‘எட்டு மணி நேரம் தீயுடன் போராடி நெருப்பை அணைத்தனர்’
  ‘தற்காப்புக்காகப் போராடும்போது எதிரிக்குத் தீங்கு விளைவித்தால் அது சட்டப்படி குற்றம் அல்ல’
  ‘மருத்துவமனையில் அப்பா உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்’

 • 3

  (ஒன்றுக்காக) மிகுந்த முயற்சியெடுத்துச் செயல்படுதல்.

  ‘சதுரங்க விளையாட்டில் ஆரம்பத்தில் மெத்தனமாக ஆடியவர் இறுதியில் கடுமையாகப் போராடி வென்றார்’
  ‘மிகவும் போராடிப் பார்த்துவிட்டுதான் திரைப்படத் துறையிலிருந்தே ஒதுங்கிவிட்டேன்’
  ‘குழந்தையைச் சாப்பிட வைக்கத் தினமும் போராட வேண்டியிருக்கிறது என்று அக்கா அலுத்துக்கொண்டாள்’