தமிழ் போற்று யின் அர்த்தம்

போற்று

வினைச்சொல்போற்ற, போற்றி

 • 1

  பாராட்டுதல்; புகழ்தல்.

  ‘தியாகி என்று அனைவராலும் போற்றப்பட்டவர் அவர்’
  ‘நாடு போற்றும் உத்தமர்’

 • 2

  (ஒன்றை அல்லது ஒருவரை உயர்வாக) மதித்தல் அல்லது கருதுதல்.

  ‘மகேந்திர பல்லவன் சிற்பக் கலையைப் போற்றி வளர்த்தான்’
  ‘பண்டைய மன்னர்கள் வீரத்தையும் மானத்தையும் இரு கண்களாகப் போற்றிவந்தார்கள்’
  ‘ஒழுக்கத்தை உயிரினும் மேலாகப் போற்ற வேண்டும்’

 • 3

  (கடவுள், மகான் போன்றோரைப் புகழ்ந்து) துதித்தல்; வணங்குதல்.

  ‘குறிஞ்சி நில மக்கள் முருகனைத் தெய்வமாகப் போற்றிவந்தனர்’