தமிழ் போஷி யின் அர்த்தம்

போஷி

வினைச்சொல்போஷிக்க, போஷித்து

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு (குழந்தை, முதியோர் முதலியோருக்கு) சத்துள்ள உணவைக் கொடுத்து ஆரோக்கியமாக வளர்த்தல்.

 • 2

  அருகிவரும் வழக்கு (ஒருவருக்கு அல்லது ஒன்றுக்குத் தேவையானவற்றைச் செய்து) பார்த்துக்கொள்ளுதல் அல்லது பராமரித்தல்.

  ‘சமையல் வேலையில் கிடைத்த சொற்ப வருமானத்தைக் கொண்டு தனது மூன்று குழந்தைகளையும் போஷித்துவந்தாள்’
  ‘அவர் தனது குரலை எப்படிப் போஷித்துவருகிறார் என்றே தெரியவில்லை’

 • 3

  அருகிவரும் வழக்கு ஆதரித்தல்; பாதுகாத்தல்.

  ‘நூற்றுக் கணக்கான மாணவர்களைப் போஷித்த அற்புத மனிதர்’

 • 4

  அருகிவரும் வழக்கு கற்பனையுடன் ராகத்தை விவரித்தல்.

  ‘இந்தக் கீர்த்தனையை இன்னும் கொஞ்சம் போஷித்துப் பாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்’
  ‘கல்யாண வசந்தம் ராகத்தில் அமைந்த கிருதியை அற்புதமாகப் போஷித்துப் பாடினார்’