தமிழ் பை யின் அர்த்தம்

பை

பெயர்ச்சொல்

 • 1

  (பொருள்களைப் போட்டுவைத்தல் அல்லது போட்டு எடுத்துச்செல்லுதல் போன்ற செயல்களுக்கு ஏற்ற வகையில்) துணி, தோல், காகிதம் முதலியவற்றைக் கொண்டு மேல்புறம் திறப்புடையதாக ஒட்டுதல், தைத்தல் முதலிய முறைகளால் செய்யப்படும் சாதனம்.

 • 2

  (சட்டை முதலியவற்றில் பேனா, காசு போன்ற) சிறு பொருள்களை வைத்துக்கொள்வதற்கு ஏற்ற வகையில் தைக்கப்படும் பகுதி.

  ‘சட்டைப் பை ஓட்டையாக இருந்ததால் பையிலிருந்த சில்லறை எங்கோ விழுந்துவிட்டது’

 • 3

  (உடலின் உட்பகுதியிலோ வெளிப்பகுதியிலோ) ஏதேனும் ஒன்றை வைத்திருக்கும் வகையில் அல்லது சேகரிக்கும் வகையில் (பைபோல்) அமைந்திருக்கும் பாகம்.

  ‘கங்காரு தன் குட்டியை வயிற்றின் பையில் வைத்திருக்கும்’
  ‘கூழைக்கடாவுக்கு அலகின் கீழ்ப்பகுதியில் பை ஒன்று இருக்கும்’
  ‘சிறுநீரகங்களில் பிரித்தெடுக்கப்படும் சிறுநீரானது சிறுநீர்ப் பைகளில் வந்துசேர்கின்றன’
  ‘நுரையீரலில் இருக்கும் காற்றுப்பைகள்’