தமிழ் பைத்தியம் யின் அர்த்தம்

பைத்தியம்

பெயர்ச்சொல்

 • 1

  மனநலம் குன்றிய அல்லது பாதிக்கப்பட்ட நிலை.

  ‘உனக்கென்ன பைத்தியமா, ஏன் இப்படி உளறுகிறாய்?’

 • 2

  மேற்குறிப்பிட்ட நிலையில் உள்ளவர்.

  ‘அவரைப் பைத்தியம் என்று சொல்கிறவர்கள்தான் பைத்தியங்கள்’

 • 3

  ஒன்றின் மீது காட்டும் தீவிரமான விருப்பம் அல்லது தீவிர விருப்பம் கொண்டவர்.

  ‘சினிமாப் பைத்தியங்களுடன் நான் பழகுவதில்லை’
  ‘அவன் சரியான புத்தகப் பைத்தியம்’
  ‘நான் ஒரு கால்பந்து பைத்தியம்’