தமிழ் பைத்தியம்பிடி யின் அர்த்தம்

பைத்தியம்பிடி

வினைச்சொல்-பிடிக்க, -பிடித்து

  • 1

    (ஒருவருக்கு) மனநிலை பாதிக்கப்படுதல்.

    ‘திடீரென்று மனைவி இறந்துபோனதில் அவருக்குப் பைத்தியம்பிடித்துவிட்டது’
    ‘இங்கு நடப்பதையெல்லாம் பார்த்தால் எனக்குப் பைத்தியம்பிடித்துவிடும் போலிருக்கிறது’
    ‘‘ஒரு விபத்தில் தலையில் அடிபட்டு அவனுக்குப் பைத்தியம்பிடித்துவிட்டது’ என்றார்’