தமிழ் பையன் யின் அர்த்தம்

பையன்

பெயர்ச்சொல்

 • 1

  (பொதுவாக) பதினெட்டு வயது நிரம்பாத சிறுவன்; வயதில் சிறியவன்.

  ‘கடைப் பையன்’
  ‘வேலைக்காரப் பையன்’

 • 2

  மகன்.

  ‘மாமாவின் பையன்’
  ‘உனக்கு எத்தனை பையன்கள்?’

 • 3

  (திருமணம் செய்துகொள்ளப்போகும்) இளைஞன்.

  ‘பெண்ணுக்குப் பையனை மிகவும் பிடித்துவிட்டது’