பொட்டு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பொட்டு1பொட்டு2பொட்டு3

பொட்டு1

பெயர்ச்சொல்

 • 1

  (மங்கல அல்லது அழகுச் சின்னமாக நெற்றியின் நடுவில்) குங்குமம், சாந்து, சந்தனம் ஆகியவற்றால் வைத்துக்கொள்ளும் சிறு வட்ட வடிவக் குறி; திலகம்/(திருஷ்டி கழிப்பதற்காகக் கன்னப் பகுதியில்) மையினால் இடும் வட்டக் குறி.

  ‘மாட்டைக் குளிப்பாட்டிப் பொட்டு வைத்து அலங்கரித்தான்’
  ‘அந்த அம்மாள் நெற்றியில் ஒரு ரூபாய் நாணயத்தின் அகலத்தில் பொட்டு வைத்திருந்தாள்’
  ‘பொட்டு பளபளக்க அமைச்சர் காரில் வந்து இறங்கினார்’
  ‘வியர்வையில் பொட்டு அழிந்துவிட்டது’

 • 2

  (அளவுகுறித்து வரும்போது) சிறிது; துளி.

  ‘வீட்டில் ஒரு பொட்டுத் தண்ணீர் கூட இல்லை’
  ‘இரவு நேரத்தில் அந்தச் சாலையில் பொட்டு வெளிச்சம் இருக்காது’

 • 3

பொட்டு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பொட்டு1பொட்டு2பொட்டு3

பொட்டு2

பெயர்ச்சொல்

 • 1

  (மாடு, கோழி ஆகியவற்றுக்குத் தீவனமாகப் பயன்படும்) உளுந்து, துவரை முதலிய தானியங்களின் தோல்.

பொட்டு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பொட்டு1பொட்டு2பொட்டு3

பொட்டு3

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு வேலியில் இருக்கும் சிறிய திறப்பு.

  ‘பொட்டு வழியாகப் புகுந்து வந்தான்’