தமிழ் போர்த்து யின் அர்த்தம்

போர்த்து

வினைச்சொல்போர்த்த, போர்த்தி

 • 1

  (குளிருக்குப் பாதுகாப்பாகப் போர்வை முதலியவற்றால் தன்னை அல்லது ஒருவரை) மூடுதல்.

  ‘காலிலிருந்து கழுத்துவரை கம்பளியால் போர்த்தியபடி தம்பி தூங்கிக்கொண்டிருந்தான்’
  ‘சேலையை நான்காக மடித்துக் குழந்தையைப் போர்த்தினாள்’
  ‘அம்மா எனக்குக் குளிர்கிறது. போர்த்தி விடு!’
  உரு வழக்கு ‘பனி போர்த்திய மலைகள்’
  உரு வழக்கு ‘கண்ணுக்கெட்டும் தூரம்வரை பசுமை போர்த்திய வயல்கள்’

 • 2

  (பெண்கள் சேலைத் தலைப்பால், ஆண்கள் துண்டு போன்றவற்றால் உடலின் மேல்பகுதியை) மறைக்கும் விதத்தில் மூடிக்கொள்ளுதல்.

  ‘குளிருக்கு இதமாகச் சேலைத் தலைப்பை எடுத்துப் போர்த்திக்கொண்டாள்’
  ‘தாத்தா சால்வையைப் போர்த்தியபடி வெளியில் உட்கார்ந்திருந்தார்’

 • 3

  (ஒருவரைக் கௌரவிக்கப் பொன்னாடை முதலியவை) அணிவித்தல்.

  ‘இசைக் கலைஞருக்குத் தொழிலதிபர் பொன்னாடை போர்த்தினார்’