தமிழ் மக்கள் யின் அர்த்தம்

மக்கள்

பெயர்ச்சொல்

 • 1

  (பொதுவாகக் கூறும்போது) மனித இனம்; (குறிப்பாகக் கூறும்போது) குறிப்பிடப்படும் நாடு, பகுதி போன்றவற்றில் வாழ்பவர்கள்.

  ‘இந்திய மக்கள்’
  ‘தென்னிந்திய மக்கள்’

 • 2

  பொதுமக்கள்.

  ‘பேருந்துக் கட்டண உயர்வை மக்கள் விரும்பவில்லை’
  ‘மக்கள் இயக்கம்’
  ‘இவை மக்களின் வரிப் பணத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்கள்’

 • 3

  உயர் வழக்கு (ஒருவருடைய) குழந்தைகள்.

  ‘மக்கள் செல்வம்’