தமிழ் மகப்பேறு யின் அர்த்தம்

மகப்பேறு

பெயர்ச்சொல்

 • 1

  குழந்தை பெற்றெடுத்தல்; பிரசவம்.

  ‘மகப்பேற்றுக்காகத் தாய்வீடு செல்வது வழக்கம்’

 • 2

  அருகிவரும் வழக்கு மக்கட்பேறு.

  ‘செல்வம் இத்தனை இருந்து என்ன? ஆள்வதற்கு மகப்பேறு இல்லையே!’

 • 3

  (பெயரடையாக வரும்போது) பிரசவம், கருத்தரிப்புக் குறைபாடுகள், பெண் இனப்பெருக்க உறுப்புகள் தொடர்பான நோய்கள், சிகிச்சை முறைகள் தொடர்பானது.

  ‘மகப்பேறு மருத்துவர்’
  ‘மகப்பேறு மருத்துவமனை’