தமிழ் மகிமை யின் அர்த்தம்

மகிமை

பெயர்ச்சொல்

 • 1

  (பெரும்பாலும் கடவுள், மகான் போன்றவர்களிடம் இருப்பதாக நம்பப்படும் நல்விளைவை ஏற்படுத்தக்கூடிய) சக்தி வாய்ந்த தன்மை; மகத்தான தன்மை; பெருமை.

  ‘‘நான் முன்னுக்கு வந்ததே அம்பாளுடைய மகிமையால்தான்’ என்றார் அவர்’
  ‘அந்த ஞானியின் மகிமை உனக்கு எங்கே தெரிந்திருக்கப்போகிறது?’
  ‘‘கல்யாணத்துக்குப் பிறகு ஆள் மாறிவிட்டானே!’ என்றதற்கு ‘எல்லாம் மனைவியின் மகிமைதான்’ என்று அண்ணன் கிண்டலாகக் கூறினார்’
  ‘விளம்பரங்களின் மகிமையை எப்படிச் சொல்ல!’