தமிழ் மகிழ்ச்சி யின் அர்த்தம்

மகிழ்ச்சி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (விரும்பத் தகுந்த அல்லது நிறைவு தரக்கூடிய அனுபவத்தினால் ஏற்படும்) இன்பம்; சந்தோஷம்.

    ‘வயதான காலத்தில் பேரன் பேத்திகளுடன் மகிழ்ச்சியாகக் காலம்கழிக்கிறார்’
    ‘கல்லூரி நாட்களைப் போன்ற மகிழ்ச்சியான காலம் என் வாழ்வில் வேறு இல்லை’
    ‘தங்கள் நூலை வெளியிடுவதில் நாங்கள் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்’