தமிழ் மங்கல் யின் அர்த்தம்

மங்கல்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  குறைவான ஒளி/(நிறம் வெளுத்து) பளபளப்பு குறைந்த தன்மை.

  ‘மங்கலான ஒளியில் படிக்காதே!’
  ‘விளக்கு மங்கலாக எரிந்துகொண்டிருந்தது’
  ‘பல முறை துவைத்த பிறகு துணிகளின் நிறம் மங்கலாகிவிடுகிறது’

 • 2

  (பார்வையைக் குறித்து வரும்போது) தெளிவாகப் பார்க்க முடியாத நிலை.

  ‘வயதாகிவிட்டதால் கண் மங்கலாகத் தெரிகிறது’