மங்கு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மங்கு1மங்கு2

மங்கு1

வினைச்சொல்மங்க, மங்கி

 • 1

  ஒளி குறைதல்.

  ‘மின் அழுத்தக் குறைவால் விளக்குகள் மங்கி எரிகின்றன’
  உரு வழக்கு ‘அவருடைய புகழ் மங்கிவிட்டது’
  உரு வழக்கு ‘தலைவருடைய செல்வாக்கு மக்களிடையே மங்கிவருகிறது’

 • 2

  (ஒலி கொஞ்சம்கொஞ்சமாக) குறைதல்.

  ‘தூரத்தில் கேட்டுக்கொண்டிருந்த ஒலிபெருக்கியின் சத்தம் நேரம் ஆகஆக மங்கிக்கொண்டே வந்தது’
  ‘தொலைபேசியின் மறுமுனையில் அவளது குரல் மங்கி ஒலித்தது’

 • 3

  (நிறம்) வெளுத்துப் பளபளப்புக் குறைதல்.

  ‘போன மாதம் வாங்கிய துணியின் சாயம் அதற்குள் மங்கிவிட்டதே’

 • 4

  பார்க்கும் திறன் குறைதல்.

  ‘பார்வை மங்கிவிட்டதால் கண்ணாடி போட வேண்டும்’

மங்கு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மங்கு1மங்கு2

மங்கு2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு சுமார் எட்டு செ.மீ. நீளத்தில் செதிள்களோடு இருக்கும் (உணவாகும்) நீல நிறக் கடல் மீன்.