தமிழ் மசாலா யின் அர்த்தம்

மசாலா

பெயர்ச்சொல்

 • 1

  (பொதுவாக அசைவ உணவில் பயன்படுத்தப்படும்) கசகசா, லவங்கப்பட்டை, பூண்டு முதலியவை சேர்த்து அரைக்கப்பட்ட கலவை.

  ‘மசாலா இல்லாமல் கறிக் குழம்பு நன்றாகவே இருக்காது’

 • 2

  (சைவ சமையலில்) துவையல்போல் அரைக்கப்பட்ட தேங்காய் அல்லது மிளகாய்.

 • 3

  உருளைக்கிழங்குத் துண்டுகளோடு மிளகாய், வெங்காயம் முதலியவை கலந்து தாளித்துத் தயாரிக்கப்பட்ட கலவை.

  ‘பூரிக்கு இன்னும் கொஞ்சம் மசாலா போட்டுக்கொள்!’

 • 4

  பேச்சு வழக்கு (திரைப்படம், நாடகம் முதலியவற்றில்) மக்கள் விரும்பி ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு அம்சங்களான சண்டை, பாட்டு, காதல் காட்சி முதலியவை குறிப்பிட்ட அளவில் நிறைந்த கலவை.

  ‘ஆறு பாட்டு, ஐந்து சண்டைக் காட்சிகள், நகைச்சுவை, காதல், பாசம் என்று கலந்து எடுக்கப்பட்ட அசல் மசாலாப் படம் இது’
  ‘மசாலாப் படங்களையே எடுத்துப் பிரபலமான இயக்குநர்’