மசி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மசி1மசி2மசி3

மசி1

வினைச்சொல்மசிய, மசிந்து, மசிக்க, மசித்து

 • 1

  (உணவுப் பொருள் நசுக்கப்பட்டு) மாவு அல்லது கூழ் போன்ற மென்மையான நிலைக்கு வருதல்.

  ‘கீரை நன்றாக மசியவில்லை’

 • 2

  (பெரும்பாலும் எதிர்மறைச் சொற்களுடன்) இணங்குதல்.

  ‘பணத்துக்கெல்லாம் அவர் மசிய மாட்டார்’
  ‘எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் அப்பா மசியவில்லை’

மசி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மசி1மசி2மசி3

மசி2

வினைச்சொல்மசிய, மசிந்து, மசிக்க, மசித்து

 • 1

  (உணவுப் பொருளை நசுக்கி) மாவு அல்லது கூழ் போன்ற மென்மையான நிலைக்கு வரச் செய்தல்.

  ‘வேக வைத்த முட்டையை மசித்துக் குழந்தைக்குக் கொடுத்தாள்’

மசி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மசி1மசி2மசி3

மசி3

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு மை.