தமிழ் மீசை யின் அர்த்தம்

மீசை

பெயர்ச்சொல்

  • 1

    (பருவ வயதை எட்டியதிலிருந்து ஆணின்) மேல் உதட்டில் வளரும் முடி.

    ‘என் மாமா பெரிய மீசை வைத்திருப்பார்’

  • 2

    (பூனை, புலி போன்ற விலங்குகளின் அல்லது சில மீன்கள், இறால் போன்றவற்றின்) வாயின் மேல்புறத்திலோ கீழ்ப்புறத்திலோ நீண்டிருக்கும் முடி அல்லது முடி போன்ற உறுப்பு/(கரப்பான்பூச்சியின் தலையின் இருபுறமும் உள்ள) விறைப்பான நீண்ட முடி போன்ற உணர்வு உறுப்பு.

    ‘செத்துக்கிடந்த கரப்பான்பூச்சியின் மீசையைப் பிடித்துத் தூக்கினான்’