தமிழ் மஞ்சள் யின் அர்த்தம்

மஞ்சள்

பெயர்ச்சொல்

 • 1

  எலுமிச்சம் பழம், தங்கம் முதலியவற்றில் இருப்பது போன்ற நிறம்.

 • 2

  (பெரும்பாலும் பெண்கள் மங்கலச் சின்னமாக அரைத்துப் பூசிக்கொள்ளும் அல்லது சமையலில் தூளாகப் பயன்படுத்தப்படும்) மருத்துவக் குணம் நிறைந்த, மஞ்சள் நிறத்திலிருக்கும் ஒரு வகைக் கிழங்கு.

  ‘மஞ்சள் அரைத்து முகத்தில் பூசிக் குளி!’
  ‘மஞ்சளை அரைத்துச் சுண்ணாம்பில் குழைத்துப் புண்ணில் தடவிக்கொண்டான்’
  ‘மஞ்சளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் உண்டு’