தமிழ் மடங்கு யின் அர்த்தம்

மடங்கு

வினைச்சொல்மடங்க, மடங்கி

 • 1

  (நீண்டிருக்கும் அல்லது விரிந்திருக்கும் ஒன்று) தன் மீது மடிந்து படிதல்.

  ‘புத்தகத்தை மூடியபோது ஒரு பக்கம் மடங்கிவிட்டது’
  ‘வாதம் வந்த பிறகு வலதுகால் சரியாக மடங்குவதில்லை’
  ‘ஆலாப் பறவையின் வெள்ளைச் சிறகுகள் மடங்கிமடங்கி விரிந்தன’

தமிழ் மடங்கு யின் அர்த்தம்

மடங்கு

பெயர்ச்சொல்

 • 1

  தன் அளவை ஒத்த மற்றொரு பங்கு அல்லது தன் அளவின் ஒரு பங்கு; -.

  ‘முன்பு இருந்ததைவிட வரி மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது’
  ‘நீ அல்வாவுக்குக் கால் மடங்கு சர்க்கரை அதிகமாகப் போட்டிருக்கலாம்’
  ‘ஒரு டம்ளர் அரிசி என்றால் மூன்று மடங்கு தண்ணீர் ஊற்றிக்கொள்’
  ‘அரை மடங்கு’

 • 2

  கணிதம்
  ஒரு எண்ணை வெவ்வேறு எண்களால் பெருக்கக் கிடைக்கும் எண்ணிக்கைகளில் ஒன்று; -.

  ‘நான்கு, ஆறு, எட்டு ஆகியவை இரண்டின் மடங்குகளில் சிலவாகும்’