தமிழ் மட்டம்தட்டு யின் அர்த்தம்

மட்டம்தட்டு

வினைச்சொல்-தட்ட, -தட்டி

  • 1

    வேண்டுமென்றே உரிய மதிப்புக் கொடுக்காமல் குறைகூறித் தாழ்த்துதல் அல்லது தரக்குறைவாகப் பேசுதல்.

    ‘ஊக்குவிக்காவிட்டாலும் பரவாயில்லை, மட்டம்தட்டாமல் இருக்கலாம் அல்லவா?’
    ‘அநாவசியமாக அந்தப் படத்தை மட்டம்தட்டி விமர்சித்திருக்கிறார்’