தமிழ் மட்டும் யின் அர்த்தம்

மட்டும்

இடைச்சொல்

 • 1

  பலருள் ஒருவரை அல்லது பலவற்றுள் ஒன்றைத் தனித்து அல்லது பிரித்துக் காட்டப் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘இந்தப் பூங்காவில் குழந்தைகள் மட்டுமே விளையாட அனுமதிக்கப்படுவார்கள்’
  ‘சமையல் அறையில் மட்டும் ஜன்னல் இல்லை’

 • 2

  வரையறுத்துக் கூறப்படும் அளவுக்கு மேல் இல்லை என்பதைக் கூறும் இடைச்சொல்.

  ‘பத்து ரூபாய் மட்டும் கொடுங்கள்!’
  ‘எங்கள் சோப்பின் விலை உள்ளூர் வரி உட்பட, ரூபாய் மூன்று மட்டுமே!’
  ‘நான்கு மாணவர்கள் மட்டும் கணக்கைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்’

 • 3

  ‘குறிப்பிட்ட சூழலில் ஒன்றை அல்லது ஒருவரை விதிவிலக்காகக் கருதக் கூடாது’ என்ற தொனியில் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘‘நீங்கள் மட்டும் ஆபாசமாகப் பேசலாமா?’’
  ‘‘தம்பியை ஏன் அடித்தாய்?’ ‘அவன் மட்டும் என்னைக் கிள்ளலாமா?’’

 • 4

  நீக்கப்படும் ஒருவரோடு அல்லது ஒன்றோடு முடிந்துவிடவில்லை என்பதைக் காட்டும் இடைச்சொல்.

  ‘எங்கள் கட்சி மட்டும் புதிய வரி விதிப்பை எதிர்க்கிறது என்று நினைக்காதீர்கள்!’

 • 5

  ‘வரை’, ‘வரையில்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘என்னால் முடிந்த மட்டும் உதவி செய்கிறேன்’