தமிழ் மீட்டெடு யின் அர்த்தம்

மீட்டெடு

வினைச்சொல்-எடுக்க, -எடுத்து

  • 1

    ஒரு பழைய கருத்தாக்கத்தைத் தற்காலச் சூழலுடன் பொருத்திப் புத்துயிர் பெறச் செய்தல்.

    ‘இலக்கணத் தளைகளிலிருந்து கவிதை மொழியை மீட்டெடுத்தவர் பாரதியார்’
    ‘ஆண்டாண்டு காலமாக மறைக்கப்பட்டுவரும் எமது இனத்தின் அடையாளத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதே எங்கள் இலட்சியம்’