தமிழ் மட்டை யின் அர்த்தம்

மட்டை

பெயர்ச்சொல்

 • 1

  (தென்னை, பனை முதலிய மரங்களில்) ஓலைகளைத் தாங்கியிருக்கும் நீண்ட, பட்டையான பகுதி.

  ‘மரத்திலிருந்து மட்டை ஒன்று தொப்பென்று கீழே விழுந்தது’

 • 2

  (தேங்காயை) மூடியிருக்கும் நார்/(வாழைத் தண்டைச் சுற்றி) மெத்தென்று அமைந்திருக்கும் பகுதி.

தமிழ் மட்டை யின் அர்த்தம்

மட்டை

பெயர்ச்சொல்

 • 1

  (சில விளையாட்டுகளில் பந்தை அடிக்க) சற்று அகன்ற அல்லது வளைந்த கீழ்ப்பரப்பு உடையதாகவும் கையில் பிடித்துக்கொள்வதற்கு ஏற்ற பிடி உடையதாகவும் செய்யப்பட்ட சாதனம்.

  ‘டென்னிஸ் மட்டை’
  ‘கிரிக்கெட் மட்டை’
  ‘ஹாக்கி மட்டை’