தமிழ் மீட்பு யின் அர்த்தம்

மீட்பு

பெயர்ச்சொல்

 • 1

  (வெள்ளம், பூகம்பம் முதலியவற்றால் பாதிக்கப்பட்டவர்களை) காப்பாற்றும் நடவடிக்கை.

  ‘வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரவுபகலாக மீட்பு வேலைகள் நடைபெற்றன’
  ‘வறட்சி மீட்புப் பணிகள்’

 • 2

  (ஒருவர் சட்டவிரோதமாக வைத்திருக்கும் தங்கம், ஆயுதம் முதலியவை) கைப்பற்றப்படும் நடவடிக்கை.

  ‘பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் மீட்பு’

 • 3

  கிறித்தவ வழக்கு
  பாவத்தினாலும் தீமையினாலும் ஏற்படுகிற அடிமை நிலையிலிருந்து இறைவன், கிறிஸ்து வழியாக அளிக்கிற விடுதலை நிலை.

  ‘‘நமது ஆண்டவர் நமக்கு மீட்பளிப்பார்’ என்று பிரசங்கியார் கூறினார்’