தமிழ் மடல் யின் அர்த்தம்

மடல்

பெயர்ச்சொல்

 • 1

  (தாழை போன்ற தாவரத்தின்) சற்று அகலமாக நீண்டிருக்கும் தடித்த இலைப் பகுதி.

  ‘கற்றாழை மடலின் முள் கையில் குத்திவிட்டது’

 • 2

  காதின் (அவரை விதை வடிவில் உள்ள) புறப்பகுதி.

  ‘கோபத்தில் காது மடல்கள் சிவந்தன’

 • 3

  உயர் வழக்கு (பூவின்) இதழ்.

தமிழ் மடல் யின் அர்த்தம்

மடல்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு கடிதம்.

தமிழ் மடல் யின் அர்த்தம்

மடல்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (திருநீறு, சந்தனம் போன்றவற்றை வைப்பதற்கான) சற்று நீண்டு குழிந்திருக்கும் மரப் பெட்டி அல்லது சிறிய பாத்திரம்.