மடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மடி1மடி2மடி3மடி4மடி5

மடி1

வினைச்சொல்மடிய, மடிந்து, மடிக்க, மடித்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு உயிர் இழத்தல்; இறத்தல்.

  ‘போரில் பல வீரர்கள் மடிந்தனர்’
  ‘பட்டினியால் மடியும் குழந்தைகள்’

 • 2

  உயர் வழக்கு (செத்து, மாண்டு ஆகிய வினையெச்சங்களோடு இணைந்து வரும்போது) (மனிதர்கள் இறந்து) வீழ்தல்.

  ‘போரில் வீரர்கள் விட்டில் பூச்சிகள்போலச் செத்து மடிந்தனர்’
  ‘பஞ்சத்தால் மாண்டு மடிகின்றனர்’

 • 3

  உயர் வழக்கு (தாவரங்கள்) அழிதல்; நாசமாதல்.

  ‘சுற்றுச்சூழல் தூய்மைக்கேட்டால் தாவரங்கள் மடிகின்றன’

மடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மடி1மடி2மடி3மடி4மடி5

மடி2

வினைச்சொல்மடிய, மடிந்து, மடிக்க, மடித்து

 • 1

  (விரிந்திருக்கும் அல்லது நீண்டிருக்கும் நிலையிலிருந்து) தன் மீதாகவே சுருண்டோ அல்லது மடக்கப்பட்டோ படிதல்; மடங்குதல்.

  ‘இஸ்திரி போட்ட பிறகும் துணி சரியாக மடியவில்லை’
  ‘கதிர்களெல்லாம் நன்கு முற்றி மடிந்துகிடந்தன’

மடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மடி1மடி2மடி3மடி4மடி5

மடி3

வினைச்சொல்மடிய, மடிந்து, மடிக்க, மடித்து

 • 1

  (நீண்டிருக்கும் அல்லது விரிந்திருக்கும் ஒன்றை) அதன் மீதாகவே படியும்படி செய்தல்.

  ‘துவைத்த துணிகளை மடிக்கத் தொடங்கினான்’
  ‘வெற்றிலை மடித்துக் கொடுத்தாள்’
  ‘தாளை நான்காக மடித்து வெட்டு!’

மடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மடி1மடி2மடி3மடி4மடி5

மடி4

பெயர்ச்சொல்

 • 1

  (உட்கார்ந்திருக்கும்போது) மடக்கிய முழங்காலுக்கு மேல் உள்ள தொடைப் பகுதி.

  ‘குழந்தை அவன் மடியில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தது’

 • 2

  (பொருள் வைப்பதற்கு வேட்டியில் அல்லது சேலையில்) பை போன்று இழுக்கப்படும் இடுப்பு ஆடைப் பகுதி.

  ‘மடி ஏந்தி அரிசியை வாங்கிக்கொண்டாள்’
  ‘வெற்றிலைப் பொட்டலத்தை மடியில் கட்டிக்கொண்டான்’

 • 3

  (பசு, நாய் போன்ற பாலூட்டி வகைப் பெண் விலங்குகளுக்கு) வயிற்றின் கீழ்ப்பகுதியில் காம்புகளுடன் தொங்கும் உறுப்பு.

  ‘பசுவுக்குப் பால் நிறைந்து மடி கனத்துத் தொங்கியது’

மடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மடி1மடி2மடி3மடி4மடி5

மடி5

பெயர்ச்சொல்

சமூக வழக்கு
 • 1

  சமூக வழக்கு
  (குளித்துவிட்டு, துவைத்த ஆடை அணிந்து) பிறரால் தொடப்படாமல் இருப்பதால் பெறுவதாக நம்பப்படும் சடங்கு ரீதியான தூய்மை.