தமிழ் மடிப்பிச்சை யின் அர்த்தம்

மடிப்பிச்சை

பெயர்ச்சொல்

  • 1

    (நேர்த்திக்கடனாக) இடுப்புத் துணியை விரித்து ஏந்திப் பெறும் பிச்சை.

    ‘குழந்தை குணம் அடைந்தால் மடிப்பிச்சை வாங்கிக் கோயிலுக்கு வருவதாக நேர்ந்துகொண்டாள்’

  • 2

    (நியாயமாகக் கிடைக்க வேண்டிய ஒன்றையும்) உரிமை இல்லாததுபோல் இரந்து பெறும் செயல்.

    ‘அவரிடம் மடிப்பிச்சை கேட்கும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுவிட்டேன்’