தமிழ் மடிப்பு யின் அர்த்தம்

மடிப்பு

பெயர்ச்சொல்

 • 1

  (தாள், துணி முதலியவை) மடிக்கப்பட்டிருக்கும் நிலை.

  ‘மடிப்புக் கலையாத சட்டை’
  ‘அங்கவஸ்திரத்தின் மடிப்புக் கலையாமல் தோளில் போட்டுக்கொண்டார்’
  ‘மடிப்பு வைத்துப் புடவையை நன்றாகக் கட்டியிருக்கிறாய்’

 • 2

  மடித்து வைத்திருந்ததால் ஏற்படும் கோடு போன்ற படிவு/(தோல், சதை) சுருங்குவதால் ஏற்படும் கோடு போன்ற தடிப்பு.

  ‘ரூபாய் நோட்டில் இருந்த மடிப்பைக் கையால் நீவிச் சரிசெய்தான்’
  ‘நெற்றி மடிப்பு’
  ‘வயிற்றில் எத்தனை மடிப்புகள்!’