தமிழ் மடு யின் அர்த்தம்

மடு

பெயர்ச்சொல்

 • 1

  சுனை; பொய்கை.

  ‘மான்கள் மடுவில் நீர் குடித்துக்கொண்டிருந்தன’

 • 2

  பெரும் பள்ளம்.

  ‘ஆற்றின் கரையோர மடுவில் கொஞ்சம் தண்ணீர் தேங்கியிருந்தது’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு குழி.

  ‘செத்துக் கிடந்த நாயை மடு தோண்டிப் புதைக்க வேண்டும்’