மடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மடை1மடை2

மடை1

பெயர்ச்சொல்

 • 1

  (வயலில், தோட்டத்தில், வீட்டில்) நீர் செல்வதற்கு ஏற்ற வகையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிறு வழி.

  ‘வரப்பில் நடந்துகொண்டிருந்தவன் கால் தவறி மடையில் விழுந்துவிட்டான்’
  ‘மடையில் குளிக்கும் காகங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்’

 • 2

  (அணை, ஏரி முதலியவற்றில்) நீர் வெளியேறாமல் தடுத்திருக்கும் தடுப்பு அல்லது கதவு; மதகுப் பலகை.

  ‘நாளை மடை திறப்பதால் வாய்க்காலில் தண்ணீர் வரும்’

மடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மடை1மடை2

மடை2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (கிராமக் கோயில்களில்) பொங்கலிட்டுச் செய்யும் பூஜை.

  ‘இன்றைக்கு எங்கள் கோயிலில் மடை’
  ‘இப்போது கோயில்களில் ஆடு வெட்டி மடை போடுவதை நிறுத்திவிட்டார்கள்’