தமிழ் மடை திறந்தாற்போல் யின் அர்த்தம்

மடை திறந்தாற்போல்

வினையடை

 • 1

  (பேச்சைக் குறித்து வரும்போது) தடுமாற்றமின்றித் தொடர்ந்து; சரளமாக.

  ‘அவர் மேடை ஏறிவிட்டால் மடை திறந்தாற்போல் தமிழ் கொட்டும்’
  ‘ஆங்கிலத்திலும் மடை திறந்தாற்போல் பேசும் ஆற்றல் உள்ளவர்’

 • 2

  (பெரும் அளவில்) தடையின்றி.

  ‘சுங்கத் தீர்வையைக் குறைத்ததும் வெளிநாட்டுப் பொருள்கள் மடை திறந்தாற்போல் வரத் தொடங்கிவிட்டன’