மட்டம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மட்டம்1மட்டம்2

மட்டம்1

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (நிலம், நீர் முதலியவற்றின்) உயரத்தின் அளவு.

  ‘அணையில் நீர் மட்டம் குறைந்துகொண்டே வருகிறது’
  ‘தரை மட்டத்திலிருந்து ஒரு மைல் ஆழமுடைய சுரங்கம்’

 • 2

  (மேடு, பள்ளம் எதுவும் இல்லாமல்) சீராக அமைகிற சமநிலை.

  ‘தளம் மட்டமாக இல்லைபோல் தோன்றுகிறது’
  ‘கொத்தனார் மட்டம் பார்த்தார்’

 • 3

  (பல்வேறு நிலைகளில் இருக்கிற சமுதாயம், மக்கள், அமைப்பு முதலியவற்றில்) குறிப்பிட்ட ஒரு பிரிவு.

  ‘அடி மட்டத்தில் உள்ள மக்களை அரசின் திட்டங்கள் சென்று அடைவதே இல்லை’
  ‘இதுகுறித்து உயர் மட்டத்தில் முடிவு எடுக்க வேண்டும்’

மட்டம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மட்டம்1மட்டம்2

மட்டம்2

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஒன்றின் அல்லது ஒருவரின் தரத்தைக் குறிப்பிடும்போது) மோசம்; கீழ்த்தரம்.

  ‘இவ்வளவு மட்டமான சாப்பாட்டை நான் சாப்பிட்டதே இல்லை’
  ‘படம் படு மட்டம்’
  ‘மட்டமாகப் பேசாதே!’
  ‘அவனைப் போல் ஒரு மட்டமான ஆளை நான் பார்த்ததே இல்லை’