மண -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மண1மண2

மண்1

பெயர்ச்சொல்

 • 1

  (பூமியின் மேற்பரப்பில் உள்ள) மணலைவிட நுண்மையாக இருக்கும் துகள்கள்.

  ‘மண் சுவர்’
  ‘கண்ணில் மண் விழுந்துவிட்டது’
  ‘தெருவில் விளையாடிக் குழந்தையின் உடம்பெல்லாம் ஒரே மண்; குளிப்பாட்டிவிடு’

 • 2

  குறிப்பிட்ட தன்மையில் அமைந்த நிலப்பரப்பு.

  ‘வண்டல் மண்’
  ‘கரிசல் மண்’

 • 3

  பேச்சு வழக்கு மணல்.

  ‘ஆற்றில் மண் எடுக்கக் கூடாது என்று சொல்லியும் யாரும் கேட்பதில்லை’

 • 4

  (தாவரங்கள் முளைக்கும்) பூமியின் மேற்பரப்பு; நிலம்.

  ‘விளைச்சல் மண் வளத்தைப் பொறுத்தது’
  ‘மழைத் துளிகள் விழுந்ததும் மண்ணிலிருந்து வாசனை கிளம்பியது’
  ‘இந்த மண்ணில் என்ன போட்டாலும் விளையும்’

 • 5

  குறிப்பிட்ட நாடு, நிலப்பகுதி, ஊர் முதலியவற்றைக் குறிக்கும் சொல்.

  ‘பிறந்த மண்ணை விட்டுப் போக விரும்பவில்லை’
  ‘அந்நிய மண்ணில் போய்ப் பிழைப்பது சிரமம்தான்’
  ‘நான் தஞ்சை மண்ணில் பிறந்தவன்’
  ‘இந்திய மண்ணில் அந்நியர் கால்வைக்க அனுமதிக்க மாட்டோம்’

மண -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மண1மண2

மண2

வினைச்சொல்மணக்க, மணந்து

 • 1

  (ஒரு பொருளுக்கு உரிய) மணம் வீசுதல்; வாசனை கமழ்தல்.

  ‘மல்லிகை மணக்கும் தோட்டம்’
  ‘பூஜை அறைக்குள் சாம்பிராணிப் புகை மணந்தது’
  ‘ரசத்தில் கொத்தமல்லி மணக்கிறது’
  உரு வழக்கு ‘அவர் பேச்சில் யாழ்ப்பாணத் தமிழ் மணக்கிறது’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு நுகர்தல்; முகர்தல்.

  ‘தேசிக்காயை மணந்தால் ஓங்காளம் வராது’

மண -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மண1மண2

மண

வினைச்சொல்மணக்க, மணந்து

 • 1

  (ஒருவரை) திருமணம் செய்துகொள்ளுதல்.

  ‘மணந்தால் தன் மாமன் மகளையே மணப்பது என்ற முடிவுக்கு வந்தான்’