தமிழ் மண்டபம் யின் அர்த்தம்

மண்டபம்

பெயர்ச்சொல்

 • 1

  (கோயிலில் மூலவர் சன்னிதிக்கு எதிரே அல்லது பக்கத்தில், உற்சவம் நடத்துவதற்கு வசதியாக) கல் தூண்கள் தாங்கிய கூரையோடு நான்கு பக்கமும் திறப்பாக உள்ள சதுர அல்லது செவ்வக வடிவக் கட்டடம்.

  ‘சாமி கும்பிட்டுவிட்டு மண்டபத்தில் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தார்கள்’

 • 2

  விழா, நிகழ்ச்சி முதலியவை நடத்துவதற்கு ஏற்ற வகையில் பெரிய அறைகள் கொண்ட கட்டடம்/ஒருவரின் நினைவாகக் கட்டப்படும் பெரிய கட்டடம்.

  ‘கல்யாண மண்டபம்’
  ‘நினைவு மண்டபம்’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு கூடம்.

  ‘மண்டபம் இல்லாமல் வீடு கட்டியிருக்கிறோம்’