தமிழ் மண்டலம் யின் அர்த்தம்

மண்டலம்

பெயர்ச்சொல்

 • 1

  (பூஜை, விரதம், சிகிச்சை முதலியவற்றில்) நாற்பதிலிருந்து நாற்பத்தைந்து நாட்கள் கொண்ட கால அளவு.

  ‘மண்டல பூஜை’
  ‘ஒரு மண்டலம் விரதம் இருக்க வேண்டும்’
  ‘இந்தச் சூரணத்தை ஒரு மண்டலம் சாப்பிட வேண்டும்’

தமிழ் மண்டலம் யின் அர்த்தம்

மண்டலம்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒரு துறையின் நிர்வாக வசதிக்காகப் பிரிக்கப்பட்டிருக்கும்) பிரிவு; (குறிப்பிட்ட) பிரதேசம்.

  ‘தொலைபேசித் தொடர்புத் துறையில் தென்னிந்தியா பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது’
  ‘அஞ்சல் துறை ஊழியர்களின் மண்டல அளவிலான மாநாடு’

 • 2

  (பூமியிலும் பூமியைச் சுற்றியும்) இயற்கைக் கூறுகளின் அடிப்படையில் பிரிக்கப்படும் பகுதி; -.

  ‘காற்று மண்டலம்’
  ‘புவியின் காந்த மண்டலம்’
  ‘வெப்ப மண்டலம்’
  ‘மித வெப்ப மண்டலம்’
  ‘குளிர் மண்டலம்’
  ‘உலகின் முக்கியமான உயிரியல் மண்டலங்களில் அமேசான் காடுகளும் ஒன்று’

 • 3

  (குறிப்பிட்ட செயல்பாட்டை நிகழ்த்தும்) உடல் உறுப்புகளின் தொகுதி; (தாவரங்களில் குறிப்பிட்ட செயல்பாட்டுக்கான) பாகங்களின் தொகுதி.

  ‘உணவு மண்டலம்’
  ‘நரம்பு மண்டலம்’
  ‘ஆணிவேர் மண்டலம்’

 • 4

  (பெரும்பாலும் பிற சொற்களோடு இணைந்து) ஒரு கிரகத்தை அல்லது நட்சத்திரத்தைச் சுற்றியிருக்கும் வெளி; நட்சத்திரங்கள் பரந்திருக்கும் வெளி.

  ‘சந்திர மண்டலம்’
  ‘சூரிய மண்டலம்’
  ‘நட்சத்திர மண்டலம்’

 • 5

  (புகை) படலம்.

  ‘சமையல் அறை ஒரே புகை மண்டலமாகக் காட்சியளித்தது’

 • 6

  சோதிடம்
  (ராசிகளைப் பிரிப்பதற்கு அடிப்படையாகக் கொள்ளும்) வானவெளியில் கிழக்கு மேற்காக உள்ள நீள்வட்ட வெளி.

  ‘ராசி மண்டலம் பன்னிரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது’
  ‘ராசி மண்டலத்தில் முதல் ராசி மேஷம்’