தமிழ் மண்டி யின் அர்த்தம்

மண்டி

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (பாத்திரத்தின் அடியில் சிறிதளவு உள்ள) கலங்கிய நிலையில் இருக்கும் திரவம்.

  ‘தண்ணீர் மண்டியாக இருக்கிறது’
  ‘ரச மண்டி இருந்தால் போடு!’

தமிழ் மண்டி யின் அர்த்தம்

மண்டி

பெயர்ச்சொல்

 • 1

  (பெரும்பாலும் காய்கறி, பழங்கள், உணவு தானியங்கள்) மொத்த அளவில் விற்பனை செய்யப்படும் கடை/மேற்குறிப்பிட்ட கடைகள் நிறைந்த இடம்.

  ‘தேங்காய் மண்டி’
  ‘இந்தத் தெரு முழுவதும் பழ மண்டிகள்தான்’
  ‘காய்கறி மண்டி’
  ‘பருப்பு மண்டி’