தமிழ் மண்டு யின் அர்த்தம்

மண்டு

வினைச்சொல்மண்ட, மண்டி

 • 1

  குறிப்பிடப்படும் ஒன்று ஒரு இடத்தில் அல்லது பரப்பில் பெருமளவில் நிறைந்து காணப்படுதல்.

  ‘ஒரு காலத்தில் காடு மண்டிக்கிடந்த இடம்’
  ‘ஒரு மாதம் வெட்டாவிட்டால் புல் மண்ட ஆரம்பித்துவிடும்’
  ‘உனக்கு ஏன் இப்படி முகத்தில் தாடி மண்டிக்கிடக்கிறது?’
  உரு வழக்கு ‘மனத்தில் வெறுப்பு மண்டியிருக்கிறது’

 • 2

  (இருள், புகை போன்றவை) பெருமளவில் நெருக்கமாகச் சூழ்ந்திருத்தல்; அடைந்திருத்தல்.

  ‘கோவில் முழுவதும் சாம்பிராணிப் புகை மண்டியிருந்தது’

தமிழ் மண்டு யின் அர்த்தம்

மண்டு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (மிக நெருக்கமானவரை, பெரும்பாலும் வயதில் இளையவரைத் திட்டும்போது) முட்டாள்.

  ‘பென்சில் காணாமல் போனதற்காக அழுகிற மண்டு நீதான்!’