தமிழ் மீண்டும் யின் அர்த்தம்

மீண்டும்

வினையடை

 • 1

  (ஒரு செயல், நிகழ்வு, நிலை போன்றவை) மறுபடியும்; திரும்பவும்; மேலும் (ஒரு முறை).

  ‘சற்று ஓய்வெடுத்த பிறகு மீண்டும் எழுதத் தொடங்கினார்’
  ‘முதல் பத்தியை மீண்டும் ஒரு முறை படியுங்கள்!’
  ‘மீண்டும்மீண்டும் அதையே சொல்லிக்கொண்டிருக்காதே!’
  ‘ஜுரம் மீண்டும் வந்தது’
  ‘நேற்று மீண்டும் மழை பெய்தது’