தமிழ் மண்டையில் ஏறு யின் அர்த்தம்

மண்டையில் ஏறு

வினைச்சொல்ஏற, ஏறி

  • 1

    (மற்றவர் சொல்வது, ஒருவர் படிப்பது முதலியவை) மனத்தில் பதிதல்; நினைவில் தங்குதல்.

    ‘கணக்குப் பாடம் சுலபமாக என் மண்டையில் ஏறாது’
    ‘இவ்வளவு சொல்லியும் அவன் மண்டையில் ஏறுகிறதா, பார்’
    ‘தினமும் படித்துக்கொண்டுதான் இருக்கிறான். ஆனாலும் மண்டையில் ஏறவில்லை’